Connect with us

Finance

வயசான காலத்துல நிம்மதியா பென்ஷன் வாங்கனுமா?..அப்போ எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் திட்டத்தை பற்றி தெரிஞ்சிகோங்க..

Published

on

lic saral pension scheme

பெரும்பாலான ஊழியர்கள் தங்களில் ஓய்வு காலத்திற்கு பின் நிலையான ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்புவர். அப்படியான பென்ஷன் வந்தால் அந்த சமயத்தில் தங்களின் மாத செலவிற்கு உதவும். அப்படிபட்டவர்களுக்கென அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நாம் 60 வயது கடந்த பின் நமக்கு மாதமாதம் குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் முக்கியமான தகவல்களை தற்போது காணலாம்.

வயது தகுதி:

இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் 40 வயதினையும் அதிகபட்சமாக 80 வயதினையும் அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

வருடாந்திர தொகை:

  • இத்திட்டத்தின் குறைந்தபட்ச வருடாந்திர தொகை ரூ. 12000 ஆகும். இதனை நாம் மாதம், காலாண்டு, அரையாண்டு எனும் கணக்கீல் கூட பெறலாம். நாம் நமக்கு பென்ஷனாக எவ்வளவு தொகை வரவேண்டும் எனும் கணக்கின் அடிப்படையில் நாம் செலுத்தும் முதலீட்டு தொகை மாறுபடும்.
  • இதில் நாம் செலுத்தும் முதலீட்டு தொகைக்கு உச்ச வரம்பு கிடையாது.
  • மேலும் இந்த தொகையை செலுத்திய பின் பிரிமியம் செலுத்தியவர் இறக்க நேரிட்டால் அந்த தொகையானது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நபரிடம் (Nominee) ஒப்படைக்கப்படும்.
saral pension scheme

saral pension scheme

மேலும் நாம் பிரிமியம் செலுத்திய காலத்தில் இருந்து 6 மாதங்கள் கழித்து அந்த தொகையை ஏதோ ஒரு முக்கியமான காரணங்களால் (மிக கொடிய நோயால் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால்) திரும்ப பெற நினைத்தால் நமக்கு நாம் செலுத்திய தொகையில் இருந்து 95% தொகையை மட்டுமே திரும்ப பெற இயலும்.

மேலும் நாம் பிரிமியம் செலுத்த ஆரம்பித்து 6 மாதங்கள் கழித்து நாம் அந்த தொகையின் மீது கடனும் வாங்கி கொள்ளலாம். எனவே இப்படியான பென்ஷன் திட்டத்தில் நாம் சேருவதனால் நமக்கு மட்டுமல்லாமல் நமது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வசதியினை பெற செய்யலாம். மேலும் தகவல்களுக்கு http://www.licindia.in என்ற முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *