Connect with us

latest news

காலையில் ரோட்டில்… மதியமே அரசு ஊழியர்… அமைச்சரின் உதவியால் நிகழ்ந்த ஆச்சரியம்…

Published

on

வேலை இல்லாமல் ரோட்டில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் வழிகாட்டுதலால் அரசுப்பணி கிடைத்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

திருச்சியை சேர்ந்தவர் ராஜா, இவருக்கு குடும்பம் கிடையாது. கிண்டியில் ரோட்டில் இருக்கும் பேப்பர், பிளாஸ்டிக்கை எடுத்து சென்று காயலான் கடைகளில் போட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். வீடும் இல்லாமல் தெருவோரங்களில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதுபோல, இன்றும் காலையில் குப்பையை எடுத்துக்கொண்டு இருந்தார் ராஜா. அப்போது திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நடைப்பயணம் மேற்கொள்ள வந்தார். அவரிடம் சென்ற ராஜா வணக்கம் சொல்ல உங்க பேர் என்ன? என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். அப்போது ராஜா குப்பை எடுத்து பிழைப்பை நடத்தி வருகிறேன். கால் வயிறுக்கு கீழ் சாப்பிடுகிறேன். சில நாட்கள் அதுவும் இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

உடனே அமைச்சர் நான் வேலை கொடுத்தால் செய்வீர்களா எனக் கேட்க செய்கிறேன் சார் என்றாராம். உடனே அவரை அழைத்து சென்று தொழிலாளர் குடியிருப்பு இல்லத்தில் குளிக்க வைத்து கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் பணி கொடுத்து இருக்கிறார்.

மாதம் சம்பளமாக 12000 ரூபாய் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும் அவருக்கு டாக்டர் செக்கப் செய்யப்பட்டு நோய் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையும் அளிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மா.சுப்ரமணியன் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட்டில்: https://x.com/Subramanian_ma/status/1815275037051551915

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *