latest news
கடந்த 100 நாட்களில் மதுரையில் 194 சிறுமிகளுக்கு நடந்த பிரசவம்… வெளியான அதிர்ச்சி தகவல்
மதுரை மாவட்டத்தினை சேர்ந்த 194 சிறுமிகளுக்கு கடந்த 100 நாளில் பிரசவம் நடந்ததாக வெளியாகி இருக்கும் தகவலால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக இளம்வயதில் திருமணம் செய்துக்கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்கள் மட்டுமல்லாது காதல் திருமணம் செய்துகொள்வோரும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர்.
கடந்த 100 நாட்களில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 194 சிறுமிகளின் பிரசவம் நடந்து இருக்கிறது. இதில் மதுரை மாநகராட்சியில் மட்டும் 49 பிரசவம் வரை நடந்ததாக கூறப்படுகிறது. இது சமூகத்துக்கு பெரிய விபரீதத்தினை உருவாக்கும். இதனால் பள்ளிகள், மருத்துவத்துறை, பெற்றோர்கள், சமூகநலத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும்.
18 வயதுக்குள் கீழ் பெண்கள் யாரும் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனையிலோ சேர்ந்தால் உடனே சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மனநல ஆலோசனை கொடுத்து சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடுத்தது. ஆனால் இதுவரை எந்த வித வகுப்புகளும் நடத்தப்படாமலே இருக்கிறது. இதனால் அரசு கொடுத்த ஆலோசனையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சமூக செயல்பாட்டாளர் வெரோனிகா ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.