Connect with us

india

அடுத்த 3 நாட்கள்…. யாரும் வீட்டை விட்டு வெளியில வராதீங்க… முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற மாநிலம் முதல்வர் தெரிவித்து இருக்கின்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பையின் பல நகரங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் ரயில் சேவைகள், விமான சேவைகள் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கனமழை நிலவரம் குறித்து மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தெரிவித்திருந்ததாவது “குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்து இருக்கின்றது. ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன்களில் 461 மோட்டார் பம்புகள், ரயில்வேயில் 200 பம்புகள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. அனைத்து துறைகளுடனும் தொடர்பு கொண்டு உள்ளேன். மத்திய மற்றும் துறைமுக ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்று தெரிவிக்கின்றார்.

google news