cinema
ஸ்ரீநிவாசன்…தேங்காய் ஸ்ரீ நிவாசானாக மாறிய பின்னணி…கண்டீசன் போட்டு கூப்பிட வைத்த நடிகர் யார் தெரியுமா?…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கேரக்டர்கள் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து தனக்கென ஒரு தனி பெயரை உருவாக்கி வைத்திருந்தவர் நடிகர் ‘தேங்காய்’ ஸ்ரீநிவாசன். ‘ஒரு விரல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது என்ட்ரியை கொடுத்தார் இவர்.
நாடக நடிகாராக மட்டுமே துவக்கத்தில் இருந்து வந்திருக்கிறார் இவர். ஸ்ரீநிவாசனின் தந்தை ராஜவேல் எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ என்ற மேடை நாடகத்தின் மூலம் நாடக உலகில் தனது அறிமுகத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் நடித்த “கிருஷ்ணன் வந்தான்” படத்தை இவர் தயாரித்திருந்தார்.
1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி பிறந்த இவர்,
1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இயற்கை எய்தினார். ரஜினியுடன் இவர் நடித்த “பில்லா” படம் மிகப்பெரிய ஹிட். அந்த படத்தில் ‘தேங்காய்’ ஸ்ரீநிவாசன் நடித்திருந்த கேரக்டர் அந்த நேரத்தில் அதிகம் பேசப்பட்டது.
கமல் சிறப்பு தோற்றம் கொடுத்திருந்த “தில்லு முல்லு” படத்தில் இவர் அடித்திருந்த லூட்டி இன்று பார்த்தாலும் சிரிப்பினை வரவழைத்து விடும். அப்பாவியாக நடித்து ரஜினி இவரை ஏமாற்றும் விதம் “தில்லு முல்லு” படம் பார்த்தவர்களை இவர் மீது பரிதாபப்பட வைத்திருந்தது. அந்த அளவிற்கு யதார்த்தமாக நடித்திருந்தார் ‘தேங்காய்’ ஸ்ரீநிவாசன்.
கிட்டத்தட்ட 900படங்களுக்கு மேல் நடித்திருந்த இவரது பெயருடன் ‘தேங்காய்’ சேர்ந்தது எப்படி தெரியுமா?.
எழுத்தாளர் கே.கண்ணன் எழுதிய ‘கல் மணம்’ நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக இவர் நடித்திருக்கிறார். நாடகத்தை பார்க்க நகைச்சுவை நடிகர் தங்கவேலு வந்திருக்கிறார். தேங்காய் வியாபாரி கேரக்டரின் ஸ்ரீநிவாசன் நடித்திருந்து விதத்தை பார்த்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இனி ஸ்ரீநிவாசனை ‘தேங்காய்’ ஸ்ரீநிவாசன் என்றே அழைக்க வேண்டும் என அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.அதன்படியே இன்றும் அவரது பெயர் ‘தேங்காய்’ ஸ்ரீநிவாசனாகவே நிலைத்து நிற்கின்றது.