Connect with us

latest news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்ல… ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாயாவதி பேட்டி…!

Published

on

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை எனவும், அதனை பராமரிக்க முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்திருக்கின்றார்.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூர் பந்தன் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் எழுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான மாயாவதி சிறப்பு விமான மூலமாக காலை 9:30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

அதையடுத்து சென்னையில் இருந்து மிகுந்த பாதுகாப்புடன் பெரம்பூர் சென்ற அவர் அங்கு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அவர் அந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்திடம் சம்பவம் குறித்த தகவலை கேட்டு அறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் ஆம்ஸ்ட்ராங். அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். தன் வீட்டின் அருகிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உண்மையான குற்றவாளிகள் யார் என்பதையும் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சி பி ஐ க்கு மாற்ற வேண்டும். சட்ட ஒழுங்கை பராமரிக்க முதலில் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். சட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டாம் என்று கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் விட்டு சென்ற பணிகளை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார

google news