india
மிடிள் பெர்த் விழுந்த விவகாரம்… உயிரிழந்த பயணி… விபத்து நடக்க இதான் காரணமாம்…
இந்தியாவில் பொதுமக்களுக்கு ஏற்ப மலிவான போக்குவரத்தாக இருப்பது ரயில் பயணம் தான். ஆனால் அதுவும் தற்போது உயிருக்கு அச்சுறுத்தலை கொடுத்து இருக்கும் சம்பவமும் தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எர்ணாகுளம் முதல் ஹஸ்ரத் நிஜாமூதின் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 62 வயதான எல்ஐசி முகவர் அலிகான் பயணம் செய்து கொண்டு இருந்தார். தெலுங்கானாவின் வாராங்கலை ரயில் நெருங்கும் போது அலிகான் மேல் இருந்த நடு பர்த் திடீரென கீழே விழுந்தது.
இந்த அடியால் அலிகானின் கழுத்தில் இருந்த மூன்று எலும்புகள் உடைந்தது. சம்பவ இடத்திலேயே அவருக்கு கை, கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அலிகான் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருக்கிறார்.
இது ரயில்வே அமைச்சகத்தின் பொருப்பற்றத்தன்மையை காட்டுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து இருக்கிறது. இதுகுறித்து, கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கும் பொருட்டு ரயில்வே அமைச்சகம் கூறுகையில், ரயிலின் பாதுகாப்பு குறைப்பாட்டால் அந்த விபத்து நடக்கவில்லை.
மேல்சீட்டில் இருந்த பயணியின் டிக்கெட் அப்கிரேட் ஆனது. அதனால் அவர் மூன்றாவது ஏசிக்கு மாறினார். அவர் தான் மிடிள் பெர்த்தை சரியாக லாக் செய்யாமல் சென்றார். அதனால் தான் சீட் கழன்று விழுந்தது. மேலும் இதுகுறித்து முறையாக விசாரணை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.