india
ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்சம் பரிசு…எம்.எல்.ஏ. பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…
இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கிறார் ராகுல் காந்தி என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியிருந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்ச ரூபாய் பரிசாக தருவதாக சிவசேனா எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அன்மையில் அமெரிக்கா சென்றார். அப்போது அங்கு பேசிய அவர், இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால், இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் எனவும், தொன்னூறு சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு தனக்கு இருக்க விருப்பமில்லை எனவும் பேசியிருந்தார்.
இட ஒதுக்கீடு குறித்த ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது பாஜக. ராகுல் இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கிறார் என ராகுல் காந்தியின் மீது குற்றம் சாட்டியும் இருந்தது. இ ந் நிலையில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் பேசியது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவிலும், நாட்டிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டுமென ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான தகவல்களை பேசி இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தந்து உண்மையான முகத்தை காட்டிவிட்டார் என சஞ்சய் கெய்க்வாட் பேசியிருந்தார்.
அதோடு ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் பேசியுள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சஞ்சய் கெய்க்வாட்டின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.