Connect with us

india

பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு!.. பாதியிலேயே அமர்ந்த பிரதமர் மோடி!…

Published

on

modi

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பாராளுமன்ற கூட்டம் நேற்று துவங்கியது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மற்றும் எம்.பியுமான ராகுல் காந்தி பாஜக அரசையும், மோடியையும் மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனையில் மோடி அரசு மவுனம் காத்தது ஏன்?..மோடியும் அமித்ஷாவும் ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை?’ என பல கேள்விகளை எழுப்பினார்.

மேலும், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என நக்கலடித்தார் ராகுல்.

இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொன்ன மோடி. வழக்கம்போல் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் ‘நாங்கள் வளர்ச்சிக்காக பாடு படுகிறோம். 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கிறோம். 10 வருடங்களுக்கு முன்பு ஊழல் பற்றி செய்திகள் நிறைய இருந்தது. ஆனால். இப்போது எதுவும் இல்லை’ என பேசினார்.

எனவே, எதிர்கட்சிகள் ‘மணிப்பூர் கலவரத்திற்கு நியாயம் வேண்டும்’ என கத்திகொண்டே இருந்தனர். ஆனாலும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த மோடி ஒருகட்டத்தில் கடுப்பாகி கீழே அமர்ந்துவிட்டார். கடந்த 10 வருடங்களில் மோடி இப்போது ஒரு போதும் பாதியில் தனது பேச்சை நிறுத்திவிட்டு அமர்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *