india
தாமரை சின்னத்தை மாற்றிவிட்டு புல்டோசர் சின்னத்தை பயன்படுத்துங்கள்!. பாஜகவை அதிரவிட்ட ஜான் பிரிட்டாஸ்!..
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பாராளுமன்ற கூட்டம் நேற்று துவங்கியது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மற்றும் எம்.பியுமான ராகுல் காந்தி பாஜக அரசையும், மோடியையும் மிகவும் கடுமையாக விமர்சித்தார்.
இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொன்ன மோடி. வழக்கம்போல் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் ‘நாங்கள் வளர்ச்சிக்காக பாடு படுகிறோம். 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கிறோம். 10 வருடங்களுக்கு முன்பு ஊழல் பற்றி செய்திகள் நிறைய இருந்தது. ஆனால். இப்போது எதுவும் இல்லை’ என பேசினார்.
எனவே, எதிர்கட்சிகள் ‘மணிப்பூர் கலவரத்திற்கு நியாயம் வேண்டும்’ என கத்திக்கொண்டே இருந்தனர். ஆனாலும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த மோடி ஒருகட்டத்தில் கோபமாகி கீழே அமர்ந்துவிட்டார். கடந்த 10 வருடங்களில் மோடி இப்போது ஒரு போதும் பாதியில் தனது பேச்சை நிறுத்திவிட்டு அமர்ந்தது இதுவே முதன் முறை.
அதேபோல், மாநிலங்களவையில் பேசிய கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ‘பாஜக தாமரையை மாற்றிவிட்டு புல்டோசரை தனது சின்னமாக பயன்படுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கை மூலம் பாஜக புதிய கடந்த காலத்தை உருவாக்க பார்க்கிறது. ஏனெனில், கடந்த காலத்தை கட்டுப்படுத்தியவர்கள், எதிர்காலத்தியும் கட்டுப்படுத்துவார்கள் என பாசிசவாதிகள் நம்புகிறார்கள். எதிர்காலத்தில் காந்திய காய்ச்சலில் இறந்தார் எனவும், நாதுராம் கோட்சே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றர் என்றும் மாணவர்கள் வரலாற்றில் படிப்பார்கள்’ என அனல் பறக்க பேசினார்.