Connect with us

latest news

அவர் சொல்வது சரிதான்!. விஜய் பேசிய கருத்துக்கு சீமான் ஆதரவு!..

Published

on

seeman

நடிகர் விஜய் இன்று பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

அந்த விழாவில் பேசிய விஜய் ‘தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் இல்லை. இது அரசியலுக்கு மட்டுமில்லை. எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும். எதிர்காலத்தில் படித்த மாணவ, மாணவிகள் அரசியலுக்கு வர வேண்டும். அதுவும் ஒரு துறைதான். இப்போதைக்கு படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். செய்தி வேறு. கருத்து வேறு. இதை ஆராய்ந்து புரிந்து கற்றுக்கொள்ளுங்கள். நல்லவனை கெட்டவானாகவும், கெட்டவனை நல்லவனாகவும் காட்டுகிறார்கள். ஆனால், எது உண்மை என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். ஒரு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான உலக பார்வை வந்துவிட்டாலே போதும். அதுவே நாட்டுக்கு நீங்கள் செய்யும் பங்களிப்பு’ என பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து விஜயின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார். எல்லோரும் தலைவராக வேண்டும் என தம்பி விஜய் சொன்னது சரிதான். எல்லோரும் தலைவரானால்தான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்’ என சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். விஜயின் அரசியல் நடவடிக்கைகளுக்கு சீமான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியதற்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

google news