Connect with us

india

கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களில் ஒழுகும் அயோத்தி ராமர் கோவில்!… பக்தர்கள் அதிர்ச்சி!..

Published

on

ayodhi

பல வருடங்களுக்கு முன்பே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததாக சொல்லி அப்போது பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த அத்வானி தலைமையில் பெரும் கிளம்பி சென்றி பாபர் மசூதியை இடித்தது.

அதன்பின் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. பல வருடங்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் பாஜகவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என தீர்ப்பு சொல்லப்பட்டது. அதோடு, வேறு ஒரு இடத்தில் மசூதி கட்டவும் இடம் ஒதுக்கி தரப்பட்டது.

அதன்பின் பாஜக அரசு அந்த இடத்தில் இராமர் கோவில் கட்டும் பணியை துவங்கியது. வேலைகள் முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இந்நிலையில், கோவிலில் வடிகால் வசதி சரியாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மழை பெய்தால் ராமர் கோவிலின் கருவறையின் மேற் கூரையில் மழைநீர் ஒழுகுவதாக கோவில் அர்ச்சகர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படி நீர் ஒழுகுவதால் ராமருக்கு அபிஷேகம் செய்வதே சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். இந்த புகாரை கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸும் உறுதி செய்திருக்கிறார். கோவில் திறக்கப்பட்டு 5 மாதம்தான் ஆகும் நிலையில் இந்த புகார் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இரவு மழை பெய்து காலையில் கோவிலை திறந்தால் தரை முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் கட்டுப்பாணி பணிகள் இன்னும் முடிவடையவில்லை மழை நீர் கசிவு இருக்காது என ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.

google news