Connect with us

latest news

வாளி தண்ணீருக்குள் குப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!.. திருப்பூரில் அதிர்ச்சி…

Published

on

murder

குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். சற்று அலட்சியமாக இருந்தாலும் விபரீதம் நேர்ந்துவிடும். அதுவும் தண்ணீரில் விளையாடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது வீட்டின் குளியல் மற்றும் கழிவறைகளில் உள்ள வாளிகளில் தண்ணீரை அதிகம் தேக்கி வைத்திராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிகளில் குழந்தைகள் விழுந்துவிட்டால் மரணமே நேர்ந்துவிடும். திருப்பூரில் அப்படி நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிரகல்யா வீட்டில் குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது பிரியா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் குழந்தையின் சத்தம் கேட்காததால் அவர் குழந்தையை தேடினார்.

அப்போது, குளியலறையில் பாதியளவு நீர் நிரப்பட்ட வாளியில் குழந்தை தலைக்குபுற கழிந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தையை தூக்கியுள்ளார். அப்போது குழந்தைக்கு பேச்சு, மூச்சும் எதுவும் இல்லை. குழந்தை மயங்கியது போல் இருந்தது. பதறியடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார் பிரியா. ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *