Connect with us

india

புதிய எண்ணில் இருந்து போன் வந்தா உஷாரா இருங்க… அதிர வைக்கும் ஆன்லைன் மோசடி…!

Published

on

பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணத்தை பறிக்கும் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. தொடர்ந்து இது போன்ற மோசடிக்காரர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகிறார்கள். மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஏமாற்றி உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் வந்துள்ளது, உங்கள் வங்கி கணக்கில் சட்டவிரோத பண மாற்றம் நடந்துள்ளது என்று கூறி மக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிப்பது என்பது தொடர்கதையாகி வருகின்றது.

நாங்கள் சொல்லும்படி ஆர்பிஐ வங்கி கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். நாங்கள் உங்களைப் பற்றி விசாரணை நடத்தி விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று கூறி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரி போல பேசியும் மோசடி கும்பல் ஆன்லைன் மூலமாக ஒரு சிலர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சில நபர்கள் இது போன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு உடனடியாக போனை துண்டித்து விடுகிறார்கள். இப்படி தமிழகம் உள்பட நாடு முழுவதும் மோசடி கும்பல்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களிடம் இதுபோன்று பணம் பறிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நாடு முழுவதும் 1750 கோடி பணத்தை மோசடி கும்பல் சுருட்டி இருக்கின்றது.

இந்த மோசடியை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அதை கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. அதிலும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை குறி வைத்து மோசடி நபர்கள் பேசி வருகிறார்கள். அவர்களை மூளை சலவை செய்து மிரட்டி தங்கள் சொல்கின்றபடி கேட்க வைக்கிறார்கள். இதன் மூலமே இலட்சக்கணக்கான பணத்தை பறி கொடுத்து பொதுமக்கள் அவுதி அடைந்து வருகிறார்கள்.

இதனால் யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றி விவரங்கள் கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தங்களது தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news