Connect with us

latest news

எல்லாமே மாறப்போகுது…! கொடைக்கானலும், ஊட்டியும் இனி… சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி… தமிழக அரசு அதிரடி…!

Published

on

ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது ஊட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படுவது கொடைக்கானல். ஊட்டி நீலகிரி மாவட்டத்திலும், கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்திலும் அமைந்திருக்கின்றது. எப்போதும் இங்கு குழுமையான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்வார்கள்.

குறிப்பாக கோடை காலத்தில் இந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தான் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஊட்டி கொடைக்கானலில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் இந்த இரண்டு மலைப்பிரதேசங்களிலும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால் பழைய விதிப்படி ஊட்டி, கொடைக்கானலை மாநகராட்சியாக மாற்றுவதில் சிக்கல் இருக்கின்றது. இதனால் தற்போது தேவைக்கு ஏற்ப நகராட்சிகளையும், நகரங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஏற்கனவே திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகியவை நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில்  தற்போது ஊட்டி, கொடைக்கானலும் மாநகராட்சியாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தரத்தை உயர்த்தினால் நிறைய வசதிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவிற்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் சட்டப்படி ஊட்டி, கொடைக்கானல் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *