Connect with us

india

கேரளாவில் அதிர்ச்சி… எல்ஐசி பணத்துக்காக கொல்ல சொன்ன நண்பர்… பக்கா பிளானா இருக்கே…

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தினை சேர்ந்த பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்த தீபு குவாரி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை களியக்காவிளை பகுதியில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து இக்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தீபுவை கொலை செய்ததாக திருவனந்தபுரத்தினை சேர்ந்த அம்பிளி என்பவரை போலீசார் கைது செய்தனர். சில கொலை வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலில் இருந்த அம்பிளி வெளியில் வந்த பின்னர் தீபுவுடன் நட்பாக பழகி வந்து இருக்கிறார். 

தீபு கடந்த ஒன்றரை வருடங்களாக செயல்படாமல் இருந்த கல்வாரி மற்றும் கிரஷரை மீண்டும் இயக்கும் முயற்சியில் இருந்தாராம். இதையடுத்து ஒரு ஜேசிபி வாகனம் மற்றும் சில பொருட்களை வாங்க கோயமுத்தூர் செல்லும் ஐடியாவில் தீபு இருந்து இருக்கிறார். ஞாயிற்றுகிழமை காலை கிளம்ப இருந்து இருக்கிறார்.

அவருடன் ஒர்க்‌ஷாப் சூப்பர்வைசரும் வருவதாக இருந்த நிலையில் ஞாயிறு இரவு தன் பயணத்தினை மாற்றினார். இதனால் சூப்பர்வைசர் வர முடியாமல் போனது. இருந்தும் வீட்டில் சொல்லிவிட்டு 10 லட்ச பணத்துடன் இன்னொரு சூப்பர்வைசரை அழைத்து செல்வதாக கூறி தீபு வீட்டில் இருந்து கிளம்பி இருக்கிறார். இதையடுத்தே அவர் அடுத்த நாள் காரில் கழுத்தறுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அம்பிளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபுவுக்கு நிறைய கடன் தொல்லை இருந்தது. அவர் இதனால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். ஆனால் அவர் எல்ஐசி பணம் வராமல் போகும். அதே வேளையில் அவரை யாரும் கொலை செய்தால் குடும்பத்திற்கு அப்பணம் கிடைக்கும் என நினைத்தாராம்.

இதை தொடர்ந்தே அம்பிளி மயக்க மருந்து கொடுத்து தீபுவை கழுத்தை அறுத்து கொன்று இருக்கிறார். தன்னுடைய ஊழியர்களுக்கு 24ந் தேதியை தீபு சம்பளம் கொடுத்ததும் இந்த கொலையில் அதிர்ச்சி தகவலாக பார்க்கப்படுகிறது. அம்பிளிக்கு கத்தி மற்றும் மயக்கமருந்தை சப்ளை செய்த சுனில் என்பவரை தேடிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

google news