latest news
தாயாவதை தடுத்த சம்பவம்…நாயால் நேர்ந்த விபரீதம்…
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதுவும் அவற்றை தங்களது வீட்டில் ஒருவராகவும், குடும்பத்து நபராகவும் பார்த்து வருபவர்கள் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். தங்களது எஜமான்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பெட்டிக்குள் பாம்பாகவும் இருந்து வருகிறது இத்தகைய வீட்டு வளர்ப்பு செல்லப் பிராணிகள்.
சில நேரங்கள் இவைகளால் வீட்டில் வசிப்பவர்களுக்கும் கூட எதிர்பாராத பிரச்சனைகள் வந்து விடத் தான் செய்கிறது, அவைகளின் அறியாமையாலும், அவைகளுக்கே உரிய மிருகத்தனமான புத்தியாலும். நான்கு மாத கர்ப்பிணிப் பெண் வயிற்றில் ஏறிய நாயினால் கருகலைந்த அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் லீ என்பவர் தனது வீட்டின் செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்.
அந்த நாய் நாற்பத்தி ஓரு வயதான பெண்னின் வயிற்றில் ஏறி இருக்கிறது. நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண் வயிற்றில் லீயின் வளர்ப்பு நாய் ஏறியதால் அப்பெண்னின் கரு கலைந்துள்ளது.
லீயின் நாய் செய்த இந்த செயலால் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக் கருவுற்றிருந்த பெண் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அப்பெண்மணிக்கு லீ பத்து லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்து வந்த தொடர் சிகிட்சைக்கு பிறகே தான் கருவுற்றதாகவும், ஆனால் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்து விட்டது எனவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.