Connect with us

latest news

கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?!.. பிரேமலதா ஆவேசம்!..

Published

on

premalatha

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாரயம் விற்பனை செய்தது தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விசாரணையில் அவர்கள் அருந்த சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்ததால் அது விஷமாக மாறியதே பலரின் மரணத்திற்கும் காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. ஒருபக்கம், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று கள்ளக்குறிச்சி வந்து கருணாபுரம் கிராமத்திற்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அரசியல் அலட்சியத்தால்தான் இது நடந்திருக்கிறது என குற்றம்சாட்டிய அவர் ’கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு எதற்கு நிதி அளிக்கிறது அரசு?. இது கள்ளச்சாரயம் குடிப்பவர்களை ஊக்குவிப்பது போல இருக்கிறது. கள்ளச்சாராயம் தயாரிப்பாளர்களை கண்டறிந்து களையெடுப்பதைத்தான் அரசு செய்ய வேண்டும்’ என அவர் ஆவேசமாக பேசினார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *