india
முதலிடம் முக்கியமல்லை…மோடி சொல்லியிருக்கும் மேசேஜ்…
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியா சிறந்து விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி மத்திய அரசு தனது மூன்றாவது ஆட்சி காலத்தின் முதல் நூறு நாட்களில் நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கான அனைத்து துறைகளையும், காரணிகளையும் கையாள முயற்சித்ததாக சொன்னார்.
நூற்றி நாற்பது கோடி இந்தியர்களும் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர் என்றார். அதே போல நாட்டின் பண்முகத்தன்மை, அளவு, திறன், செயல் திறன் ஆகியவை தனித்துவமானது. அதனால்தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளைப் பற்றி தான் சொல்லுவதாக சொன்னார்.
இந்தியாவில் அயோத்தி உள்ளிட்ட மற்ற பதினாரு இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும் போது சொன்னார்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் இப்போது தயாராகி வருகிறது என குறிப்பிட்ட மோடி முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தரவரிசையைத் தக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதே போல இருபத்தி ஓன்றாம் நூற்றாண்டில் இந்தியா சிறந்து விளங்கும் என்பதில் இந்தியர்கள் மட்டுமில்லை ஒட்டு மொத்த உலகமே உணர்கிறது என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி பின்னர் பேசியிருந்த பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.