india
ஒரு ரூபாயும் ஒரு தேங்காயும் போதும்… வித்தியாசமாக வரதட்சணை கேட்ட மணமகன்…
வரதட்சணை கேட்பது குற்றம் என்றாலும் நம்மை சுற்றி நடக்கும் எல்லா திருமணங்களிலும் எதோ வகையில் அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் தகுதிக்கேற்ப கொடுத்து வாங்கி கொண்டு தான் உள்ளனர். இது சாதாரண நிகழ்வாக கடந்து போகும் போது பரவாயில்லை.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த படும் பெண்களும் இங்கு ஏராளம். கேரளா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் நிறைய இளம்பெண்கள் இந்த கொடுமையால் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும், அடி, உதையுடன் இன்னமும் கணவர்களின் சித்ரவதையில் வாழ்க்கையை நடத்தி வருவதும் வழக்கமாக இருக்கிறது.
ஆனால் இந்த கதைக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவராக இருக்கிறார் ஒரு புது மாப்பிள்ளை. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த அனிதா வர்மாவுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் வரதட்சணையாக ஒரு ரூபாயும், ஒரு தேங்காய் மட்டுமே கொடுக்கப்பட்டதாம்.
பொதுப்பணி துறையில் இளநிலை பொறியாளராக இருக்கும் ஜெய் நாராயண் வரதட்சணை வாங்க கூடாது என கட்டாயமாக கூற இதை அவர் பெற்றோரும் அமோதித்து இருக்கின்றனர். இதை தொடர்ந்து இத்திருமணத்தில் வரதட்சணை வாங்கவில்லையாம். மேலும் பெண் முதுகலை படிப்பை பெற்றோர் படிக்க வைத்துள்ளனர்.
அதுவே பெரிய வரதட்சணை தான். அவர் வேலை கிடைத்த பின்னர் முதல் வருட சம்பளத்தினையும் பெண்ணின் பெற்றோருக்கு கொடுக்கவும் சம்மதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.