Connect with us

india

கப்பு முக்கியமில்ல பிகிலு…பக்கோடாவா?…பணமா?…திருட வந்த இடத்தில் திட்டத்தை மாற்றிய கொள்ளை கும்பல்…

Published

on

Robbery

திருடப்போன இடத்தில் நகை மற்றும் பணத்தை மட்டுமே குறி வைக்காமல், வீட்டின் சமையலறைக்குள்ளும், ஃப்ரிட்ஜிற்குள்ளும் இருந்த பக்கோடவை ருசித்து சாப்பிட்டுவதை வழக்கமாக வைத்து வரும் திருட்டு  கும்பல் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் தினசரி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக போலீஸாருக்கு புகார்கள் குவிந்து வந்ததை அடுத்து அங்கே கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திருட்டு கும்பலை கையும் களவுமாக பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.

ஒரே பகுதியில் ஆறு, ஏழு வீடுகளில் ஒரே மாதிரியான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. இதனால் கைவரிசை சம்பவங்களில் ஒரு குறிப்பிட்ட கும்பல் தான் ஈடுபட்டு வந்திருக்குமோ? என்ற சந்தேக வலுக்கத்துவங்கியது.

Police arrest

Police arrest

தாங்கள் செல்லும் வீடுகளில் நகைகள், பணங்களை திருடுவதற்கு முன்னர் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை தின்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல்  வீடுகளுக்குள் சிகிரெட் பிடித்தும், குட்கா போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருவதையும் தங்களது ஸ்டைலாக வைத்திருக்கின்றனர். களவு நடந்த வீடுகளில் பான் பீடா எச்சில் கரைகள் தென்பட்டுருக்கிறது.

இதில் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி சிரிப்பை வரவழைத்த விஷயமாக பார்க்கப்படுவது வீடுகளிலிருந்த பக்கோடாவை குறி வைத்து தின்று வந்திருக்கின்றனர். பல இடங்களில் கைவரிசை காட்டி வரும் இந்த பக்கோடா கொள்ளை கும்பலை விரைவில் பிடித்தும், அவர்களால் நிலவி வரும் அச்சத்தை போக்க வழி செய்ய வேண்டும் என நொய்டா மக்கள் தொடர்ந்து கோரிக்கை வருகின்றனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *