Connect with us

india

 நான் அப்படி சொல்லலையே…அந்தர் பல்டி அடித்த செல்வப்பெருந்கை?…

Published

on

Selvaperunthagai

நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி வைத்தே காங்கிரஸ் கட்சி  எதிர்கொண்டு வந்தது. இதவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதன் காரணமாகவும்  பார்க்கப்படுகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பெரும் பின்னடைவை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனக்கான நிலையை தக்க வைத்துக் கொண்டது. 2024ல் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்கள் கிடைத்தது 2019 தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது. கடந்த தேர்தலை விட இந்த முறை காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி பேர் சொல்லும் அளவிலான வெற்றிகளை பெற்றது  பல தொகுதிகளில்.

Rahul Gandhi

Rahul Gandhi

ஆனால் ஒவ்வொரு தேர்தல் சமயத்தின் போதும் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்டுகளே ஒதுக்கப்படுவதாக அதன் தொண்டர்களை ஆதங்கப்பட்டு வந்தனர். தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி விடும் என பேச்சுக்கள் எழுந்தது.

ஆனாலும் அதனை எல்லாம் பொய்யாக்கும் விதத்தில் தான் தேர்தல் கூட்டணி இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை திருவள்ளூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது காங்கிரஸ் கட்சி வருகிற 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டால் கூட வெற்றி பெறும் என பேசினார். கூட்டம் நடந்த பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் செல்வப் பெருந்தகை.  காங்கிரஸ் தனித்து நிற்பது குறித்த கேள்வியை செய்தியாளர் எழுப்பிய போது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவே தான் அப்படி பேசியதாக சொல்லி சமாளித்தார்.

 

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *