Connect with us

latest news

தமிழகத்தில் கோவில் நிதியை எப்படி செலவு செய்றீங்க… உச்சநீதிமன்றம் கேள்வி…!

Published

on

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றது. அதில் வரும் நன்கொடை நிதி எப்படி செலவிடப்படுகின்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது.

தமிழகத்தில் கோயில்களுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது, ஆயிரக்கணக்கான கோவில்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசே அறநிலையத்துறை மூலமாக நிர்வகித்து வருகின்றது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 612 கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகின்றது.

அதில் அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்று இருக்கின்றார். அவர் பொறுப்பேற்றது முதல் கோவில் சொத்துக்களை மீட்பது கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜகவினர் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக திமுக மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை என்ற துறையை இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கோவில் நிதிகள் மறைமுகமாக முறைகேடு செய்யப்படுவதாக ஆலயம் காப்போம் பவுண்டேஷன் என்ற அமைப்பு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தது. அதில் தமிழகத்தில் உள்ள 38000 கோயில்களில் பெரும்பாலான கோயில்களுக்கு அறங்காவலர்கள் கிடையாது. மறைமுகமாக கோவில் நிதிகளில் இருந்து முறைகேடுகள் செய்யப்படுகிறது. கோவில் நிதியை இந்து சமய அறநிலை துறை அறக்கட்டளைக்கு மாற்றியதை திரும்ப கோயிலுக்கே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் உண்டியல் காசுகள் மற்றும் நன்கொடைகளை செலவிடுவதற்கு முறைப்படுத்தப்பட்ட திட்டம் ஏதேனும் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஆயிரக்கணக்கான கோயில்களில் வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகின்றது என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றார். விரைவில் தமிழக அரசு சார்பில் இருந்து விரிவான விவாதங்கள் விரைவில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news

india

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

Published

on

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர் தான் குமாரசாமி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சொல்லியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்தால் தானும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தெரிவித்துள்ளார்.

Siddaramaiah

Siddaramaiah

கர்நாடகா மூடா நில முறைகேடு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுத்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமீனின் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால் தானும் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

latest news

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

Published

on

Stalin

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் காட்டாட்சி தர்பார் நடந்து வருவதாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் கடந்த நாற்பது மாதங்களாக நடைபெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில் அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம் என விமர்சித்துள்ளார். 27.09.2024 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குறியது என தனது அறிக்கையின் வாயிலாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Edappadi Palanisamy

Edappadi Palanisamy

ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு அப்படி சொத்து வரி உயர்த்தப்படும் போதெல்லாம் குடிநீர், மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது. மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது, “பூமியில் பிறந்த மனிதன் நிம்மதி பெறுவது அவன் அடக்கம் ஆகும் போதுதான், பெரும் துயரம் கொள்வது உடனிருந்தவர்கள் காலமாகும் போது” என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் மனித வாழ்க்கை பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம், தனியாருக்கு சம்பள உயர்வு என்பது அந்தந்த தனியார் நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் சம்பள உயர்வு என தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

latest news

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

Published

on

Anbarasan udhayanidhi

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. அன்மையில் அமெரிக்க சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் வெளிநாடு செல்லும் முன்னரே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தமிழக நாளிதழ் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களானது நாளை நடைபெறும் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முக்கிய அமைச்சர்கள் சிலரின் இலாகா மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Stalin

Stalin

சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு பற்றியும்  சொல்லப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என உறுதி பட சொல்லியிருந்தார்.

பத்து நாட்களுக்குள் இது நடந்தே தீரும் என அமைச்சர் அன்பரசன் சொல்லியிருந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறித்த செய்தியை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதனால் திராவிட முன்னேற்றக கழகத்தினரிடையே உதய நிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா? என்ற ஆவல் மேலோங்கியுள்ளதாக தெரிகிறது.அதே போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

Cricket

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

Published

on

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிவப்பு பந்துடன் ஹர்திக் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து பலரும், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறினர். பலரும் இவரது டெஸ்ட் கம்பேக் விரைவில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக ஐபிஎல் 2022 ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். முழு கவனத்தையும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா செலுத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதற்கும் கூட அவர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடினால், தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது ஏன் என்ற கேள்விக்கு விக்கெட் கீப்பர், பேட்டர் பார்த்திவ் பட்டேல் பதில் அளித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமான போது ஜியோசினிமாவில் பேசிய பார்த்திவ் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக சிவப்பு பந்து கொண்டு பயிற்சி செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.

“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. வெள்ளை பந்து கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தான் அவர் சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னை பொருத்தவரை அவரது உடல், நான்கு அல்லது ஐந்து நாள் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட அவர் ஒற்றை முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்,” என்றார்.

google news
Continue Reading

latest news

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

Published

on

Anbumani

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியீர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிள்ளியூரை சுற்றியுள்ள கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கம் அமைக்கப்பட்டால் புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார. கிள்ளியூர் மற்றும் அதினை சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும்.

Tunnel

Tunnel

மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏறபடும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள் மக்கள் புற்று நோய், சிறு நீரகப் பாதிப்பு, தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அன்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் அன்புமணி

இந்த பகுதிகளில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும். அணுக்கதிர் வீச்சு தொடர்பான தீய விளைவுகளும் ஏற்படும். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

google news
Continue Reading

Trending