Connect with us

india

தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

Published

on

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்குவதற்கு தடை விதித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை கடந்த 17ஆம் தேதி முதல் தடை விதித்திருந்தது. இதனால் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்து இருந்த நிலையில் அந்த ஆம்னி பேருந்தின் உரிமையாளர்கள் பலரும் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் ஆல் இந்தியா பெர்மிட் மூலம் ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயங்கிக் கொள்ளலாம். அந்த பேருந்துகளை சிறைபிடிக்க கூடாது என்று கூறி இடைக்கால அனுமதி வழங்கியிருக்கின்றது. இதை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கம்போல் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை இயக்கி வருகிறார்கள்.

பெங்களூர், ஹைதராபாத், கொச்சின், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு சொல்லக்கூடிய வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்திற்கு உள்ளே வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தற்போது வரை இயக்கவில்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள். வரும் நாட்களில் அந்த பேருந்துகளும் இயங்கும் என்று கூறப்படுகின்றது.

google news