india
மாதவிடாய் விடுப்பு… பெண்களுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது…? உச்ச நீதிமன்றம் அதிரடி…!
மாதவிடாய் விடுப்பு வழங்குவது பெண்களின் வேலையை பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இது தொடர்பாக உத்திரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் இன்று விசாரணை செய்தார். அப்போது பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழி வகுக்கும்.
மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என்று அறிவித்தால் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறையும். நாங்கள் அதை விரும்பவில்லை. பெண்களை பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இப்படி செய்தால் அது அவர்களுக்கு பாதகமாக முடிய வாய்ப்பு இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார் .
மேலும் மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடுங்கள் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.