Connect with us

latest news

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு… ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சி…

Published

on

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

பிரவீன் என்பவர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அழைத்து செல்ல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதை தொடர்ந்து பிரவீனின் உறவினர் சுரேஷ் கள்ளச்சாராயம் அருந்தி வயிற்றுவலி மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட பலரும் கள்ளச்சாராயம் அருந்தினர். இதனால் உயிரிழப்புகள் எக்கசக்கமாக அதிகரித்தது. 49க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் உள்ளனர்.

இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்லியும், கள நிலவரத்தினை ஆராய்ந்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

இதையடுத்து, விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உறுதியாக முடிவு செய்து படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலுயுறுத்தி விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் சென்னையில் வரும் 24ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஷ சாராய விவகாரம்!. சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக தொடர்ந்த வழக்கு!.. இன்று விசாரணை!..

google news