latest news
தமிழ்நாட்டுக்கு எப்போது 5G சேவை அறிமுகம்?!.. பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பதில் இதுதான்!..
தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை வந்துவிட்டது. இந்தியாவிலேயே தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4ஜி மற்றும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது.
அரசும் 4ஜி சேவையை கொடுத்தால் அந்த நெட்வொர்க் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 4ஜி சேவையை மக்களுக்கு கொடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்ட வருகின்றன. ஒருபக்கம், இதன் காரணமாக பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனது.
இதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம், தமிழ்நாட்டில் எப்போது 4ஜி மற்றும் 5ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிக்கும் என பல வருடங்களாக பலரும் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், இதுபற்றி பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் வெங்கடேஸ்வரலு இதற்கு பதிலளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் 5ஜி சேவை வழங்கப்படும். 5ஜி சேவை அறிமுகம் செய்த பின் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 4ஜி சேவை அடுத்த 6 மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும்’ என அவர் கூறியிருக்கிறார்.