india
திருப்பதி தேவஸ்தானத்தில் திருடியே 100 கோடி சொத்து சேர்த்த தமிழர்… அடக்கொடுமையே!!
திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து உண்டியல் காணிக்கையை திருடி 100 கோடி அளவில் சொத்து சேர்த்த தமிழகத்தினை சேர்ந்த நபர் குறித்த விவரம் இரண்டு வருடங்களுக்கு பின்னர் வெளியாகி இருக்கிறது.
திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருவதுண்டு. அவர்கள் கொடுக்கும் காணிக்கைகளும் கோடிக்கணக்கில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த காணிக்கைகளை அங்குள்ள ஊழியர்கள் தான் எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். அவரும் காணிக்கைகள் என்னும் படியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தேவஸ்தானத்தை விட்டு வெளியேறும் போது அவருடைய நடவடிக்கைகளில் பிரச்சனைய இருந்ததை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.
இதை அடுத்து, அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்திய நிலையில் 20 ஆண்டுகளாக காணிக்கைகளாக வரும் வெளிநாட்டு கரன்சிகளை தன்னுடைய மலக்குடல் மூலம் திருடி சென்று நகை,வீடு, தோப்பு உள்ளிட்ட 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கைக்கு பாதகமாகும்.
எனவே இந்த விவகாரத்தை வெளியில் தெரியாமல் தேவஸ்தான லோக் அதாலத்தில் வைத்து அந்த ஊழியர் வாங்கி சேகரித்த சொத்தில் இருந்து ஒரு பகுதியை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக எழுதிக் கொடுக்கும்படி பிரச்சனையை பேசி முடித்து இருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த விவகாரத்தினை ஆந்திர மேல் சபை உறுப்பினர் மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டிக்கு புகாராக தெரிவித்திருக்கிறார். அவர் இது குறித்து சட்டமன்றத்தில் விவாதித்த நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.