india
ஏங்க அது சரக்கு இல்ல!… டீ தான்… வைரல் புகைப்படம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளக்கம்…
காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால் ரெஸ்டாரெண்ட்டில் அமர்ந்து ஆல்கஹால் குடிக்கும் புகைப்படம் என இணையத்தில் உலா வரும் புகைப்படம் குறித்து காங்கிரஸ் விளக்கம் அளித்து இருக்கிறது. மேலும் ஹைதராபாத்தில் பொய் செய்தி பரப்பியவர்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து எப்ஐஆர்ரை எக்ஸ் கணக்கில் வெளியிட்டு, befitting facts என்ற கணக்கில் இருந்து இந்த தவறான விஷயம் பரப்பப்பட்டு இருக்கிறது. ரெஸ்டாரெண்ட்டில் அமர்ந்து காங்கிரஸ் எம்எல்சி டாக்டர் வெங்கட் நர்சிங் ராவ் பல்மூர் ப்ளாக் டீ குடித்த புகைப்படம் ஆல்கஹால் என பரப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்கள் அறிய முற்பட்டோம். வெங்கட் நர்சிங் ராவ் பல்மூர் ஹைதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். FIR இன் நகல் இதோ. பொய்யான செய்திகள் எப்போதுமே அனுமதிக்கப்படாது. குற்றவாளிகள் தண்டனைகளை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்.
அந்த புகாரில், இந்த பொய் செய்தி கொண்ட புகைப்படத்தினை பரப்பியதின் பின்னணியில் சஷாங் சிங் இருக்கிறார். மேலும் சஷாங் அந்த புகைப்படத்தில் கேரளா போலீஸை டேக் செய்து வேணுகோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு இருக்கிறார். காங்கிரஸின் மூத்த உறுப்பினரான வேணு கோபால் மீது வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டு இது. பாராளுமன்றத்தில் பல மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் மீது இது மோசமான குற்றச்சாட்டு.
ஒரிஜினல் போஸ்ட்டில் குறிப்பிடப்பட்ட ரெஸ்டாரெண்ட் அனுமதி இல்லாமல் சரக்கை வழங்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வேணுகோபால் மற்றும் ராகுல் காந்தி வயநாடு பகுதி சென்ற போது மதிய சாப்பாட்டுக்காக தாமரச்சேரி வொயிட் ஹவுஸ் ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. அருகில் ராகுல்காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ்காரர்கள் இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸின் புகார் ட்வீட்: https://x.com/INCIndia/status/1801574619872112697