latest news
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க இதான் காரணமா? பீதியில் மக்கள்!…
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது.
கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார். இதனால் அவருக்கு கண் எரிச்சல், கடுமையான வயிற்றுவலி வந்திருக்கிறது. உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கின்றனர்.
பிரவீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சாராயம் அருந்தி இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறிவிடுகின்றனர். அவர் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு குடும்பத்தினர் அழைத்து வருகின்றனர். 19ந் தேதி காலை 2 மணிக்கு தான் சுரேஷ் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார். அவருக்கு 4 மணியில் இருந்தே வயிற்றுவலி, கண் எரிச்சல் ஏற்பட்டது.
அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். சிகிச்சையில் அவர் அனுமதிக்கப்பட்டாலும் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 7 மணிக்கு சுரேஷ் கள்ளச்சாராயத்தால் இறந்துவிடுகிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் பிரவீனும் இறந்துள்ளார். கருணாபுரத்தின் முதல் கள்ளச்சாராய மரணமாக சுரேஷ் இறப்பு ஆனது.
சுரேஷின் இறுதி சடங்கு வீட்டில் நடக்கும் போது அதில் கலந்துக்கொண்ட மற்றவர்களும் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கின்றனர். சுரேஷின் இறப்பு குறித்து தெரிந்தே இதை செய்தனர். இதனால் உயிரிழப்பும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பிரவீனை வீட்டிற்கு அனுப்பாமல் அவர் குடித்தது கள்ளச்சாராயம் தான் என அப்போதே கண்டறிந்து இருந்தால் இந்த பிரச்னை தடுக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேப்பர் லீக் அரசு நீட்டை எப்போது ரத்து செய்யும்? – காங்கிரஸ் சாடல்!