Connect with us

latest news

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!.. தமிழக அரசு அறிவிப்பு…

Published

on

govt staff

ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது.

அதோடு 5 மாதத்திற்கான நிலுவை தொகையும் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ‘2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 2024ம் வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்’ என சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி கொடுக்கப்படும் எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை இப்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை மின்னணு தீர்வு சேவை மூலம் கொடுக்கப்படும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது.

அதேநேரம், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தாது எனவும், 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

google news