Connect with us

latest news

வாய்க்குள் வாழ்ந்த கரப்பான்பூச்சி…ஜப்பானில் நடந்த வினோத சம்பவம்!…

Published

on

Cockroach

பல நூறு அடியிலிருந்து தவறி விழுந்து உயிர் பிழைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள், கால் தவறி பக்கத்திலேயே விழுந்து உயிரிழந்தவர்களையும் இந்த உலகம் பார்த்து இருகிறது. இறந்து விட்டதாக நினைத்து இறுதிச்சடங்குகள் செய்யப்படும் போது எழுந்து வந்த அதிர்ச்சியை கொடுத்த நபர்களைப் பற்றிய செய்திகளும் சில நேரங்களில் காதில் விழுந்திருக்கிறது.

இப்படிப்பட்ட வினோதமான சம்பவங்களை பற்றியை செய்திகளைப் பார்க்கும் போது ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருக்கும், அதே நேரத்தில் மறுபக்கம் ஆச்சர்யத்தையும் தந்து விடும். இப்படி அதிர்ச்சியும், ஆச்சர்யம் தரக்கூடிய வினோத சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஐம்பத்தி எட்டு வயதாகும் முதியவர் ஒருவர் வழக்கம் போல தூங்கி எழுந்துள்ளார். அப்போது அவரது தொண்டையில் ஏதோ இருப்பதாக உணர்ந்த அவர் அதனை வெளியில் எடுப்பதற்கு பல முறை இருமியுள்ளார். ஆனாலும் அவருக்கு தான் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் தனது வாயிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வருவதை உணர்ந்த அந்த முதியவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

china

china

என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில் மருத்துவ உதவியை நாட முடிவு செய்தார். மருத்துவரைச் சந்தித்து தனது நிலைமை குறித்து சொல்லியிருக்கிறார். ஐம்பத்தி எட்டு வயது உடைய அந்த நபரை முழுமையாக பரிசோதித்த போது தான் இந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம் தரக்கூடிய வினோதமான நிகழ்வு நடந்திருக்கிறது.

பரிசோதனையின் முடிவில் அந்த நபரின் தொண்டைக்குள் கரப்பான் பூச்சி ஒன்று உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிகிட்சைக்குப் பின் சீனரின் தொண்டையிலிருந்த கரப்பான்பூச்சி அகற்றப்பட்டது. அவரது தொண்டைக்குள் சென்று மூன்று நாட்கள் இருக்கலாம் என்ற அதிர்ச்சியான செய்தியையும் சீனா நாட்டைச் சேர்ந்த அந்த நபரிடம் மருத்துவ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

google news