Connect with us

latest news

வேகம் முக்கியமில்ல பிகிலு…விவேகம் தான் முக்கியம்…தவெக தலைவர் விஜய் அறிவுரை…

Published

on

Vijay

தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அரசியலின் ஆளுமைகள் கோலிவுட்டிலிருந்து வந்தவர்களே. இவர்களுக்கு அடுத்த படியாக இயக்குனரும், நடிகருமான சீமான், மன்சூர் அலிகான் ஆகியோர் தீவிர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை துவங்கி தேர்தலில் களம் கண்டார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் உச்சபட்ச நடிகராக இருந்து வருபவர் விஜய்.வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த “தி கோட்” படம் கடந்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அப்படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் விஜய்.

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ளார். தொடர்ந்து தனது கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும் வெளியிட்டார். விஜய் கட்சியின் முதல் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டிற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் விஜய்.

அதில் அரசியலில் வேகமாக இருப்பதை விட விவேகமாக தான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay

TVK Vijay

அரசியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு தவெகவின் மாநாடு பதிலளிக்கும் என தெரிவித்துள்ள விஜய். அரசியலில் எதாத்தமாக இருப்பதை விட எச்சரிக்கைய்யுடன் களமாட வேண்டும் என்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கு இயக்கமாக தவெக  மாறிவிட்டதாகவும் விஜய் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

மாநாட்டிற்கான கால்கோள் விழா மட்டுமல்ல இது அரசியல் பணிகளுக்கான கால்கோள் விழா என்றும், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டிற்கு உண்ர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளை தொடர வேண்டும் எனவும், வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.

அறிக்கையில் “தோழர்களே” என அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருப்பது விஜய் கட்சியின் கொள்கை மீதான அதிக எதிர்பார்ப்பை கொடுக்கும் வார்த்தையாக அமைந்துள்ளது.

google news

latest news

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…

Published

on

Stalin

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாலை நாலு மணிக்கு கோலாகலாமாக துவங்க உள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி  இந்த போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கன மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வருகிற இருபத்தி நான்காம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. முப்பத்தி ஆறு வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளது.

இந்தாண்டு தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகையை ரூபாய் முப்பத்தி ஏழு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான துவக்க விழா இன்று மாலை நாலு மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறுகிறது.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப்  பிரவீன் சித்ரவேல் ஆகியோர் துவக்க விழாவில் ஜோதியை ஏந்திச் செல்ல உள்ளனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கும் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் என ஐந்து வகை பிரிவாக நடத்தப்பட்ட போட்டிகளில் பதினொன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்.

மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்திருந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள முப்பத்தி மூவாயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.

google news
Continue Reading

latest news

வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…

Published

on

தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்  எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

rain

அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த இருபத்தி நான் கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

google news
Continue Reading

latest news

பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…

Published

on

Udhayanidhi

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும்  இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பவன் கல்யாண் எதிர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இரு மாநில துணை முதல்வர்களிடையே கருத்து மோதல் துவங்கியுள்ளது.

சனாதானம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசியிருந்தார். அப்போது சனாதனம் என்பது வைரஸ் போன்றது என சொல்லியிருந்தார். இதற்கு ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது கருத்தினை சொல்லியிருந்தார்.

Pawan Kalyan

Pawan Kalyan

சனாதன தர்மத்தை  யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களைப் போலவே நிறைய பேர் வந்து போய் விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழக துணை முதல்வர் உதயநிதி. பவன் கல்யாண் கருத்து குறித்து பொறுதிருந்து பார்க்கலாம் ‘LET’S WAIT AND SEE’  என தனது காரில் அமர்ந்து சிரித்தபடியே பதிலளித்துள்ளார்.

திருப்பதி கோவில் லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நேரத்தில் திரைப்பட நடிகர் கார்த்தி பட விழா ஒன்றில் பேசியிருந்ததற்கு கார்த்தியை கடுமையாக கண்டித்து தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தார் பவன் கல்யாண்.

தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்கு தான் மன்னிப்பு கோருவதாக கார்த்தி பதிலளித்திருந்தார். இந்நிலையில் சனாதனம் குறித்து துணை முதல்வர்கள் இருவரும் பேசியுள்ள காரணத்தினால அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

google news
Continue Reading

Finance

உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…

Published

on

gold

தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.

தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.

நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி  என்பதாகவும் (ரூ.56,880/-)  இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Silver

Silver

இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.

google news
Continue Reading

cinema

சேட்டன் வந்தல்லே!…டிஸ்சார்ஜ் ஆகி வந்தல்லே!…வீடு திரும்பிய வேட்டையன்…

Published

on

rajini

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகீட்சை முடிந்து அவர் நலமமுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாத் துறையில் ஐம்பது ஆண்டுகால பணியை நெருங்கி வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “வேட்டையன்” படம் உலகம் முழுவதும் வருகிற பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rajinikanth

Rajinikanth

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்த ரஜினிகாந்திற்கு கடந்த முப்பதாம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர். தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் பூரண நலமடைந்து வீடு திரும்ப பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தியிருந்தனர். ரஜினி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த் சிகீட்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அறுவை சிகீட்சை தேவைப்படாத காரணத்தால், இதய தமனியில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்பியிருப்பது ரஜினியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் “கூலி” படத்தில் நடிப்பதை தொடருவார் என கோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

google news
Continue Reading

Trending