latest news
நீட் பற்றி ஆவேசமா பேசுனீங்க.. ஆனா இந்த விஷயத்தை பொய்யா சொல்லிட்டீங்களே.. சிக்கிய தவெக தலைவர் விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கிய நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் படியை மெதுவாக முன்னெடுத்து வைத்து இருக்கிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடந்தது.
முதல் நிகழ்வில் போதை பொருள் தடுப்பு குறித்து விஜய் பேசி இருப்பார். இரண்டாம் கட்டமாக இன்று திருவான்மியூரில் பிரம்மாண்டமாக விஜய் கல்வி விருது விழா நடந்தது. இதில் பேசிய விஜய், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் பேசி இருப்பார். மேலும் அவர் பேசும்போது, நீட் தேர்வால் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றார்கள்.
1975க்கு முன்னர் வரை கல்வி மாநில பட்டியலில் இருந்தது. அதை பொது பட்டியலுக்கு மாற்றியது தவறு. நீட் முறைகேடுகளால் அதன் மீதான நம்பகத்தன்மையே போய்விட்டது. தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு தீர்மானத்தினை நான் ஆதரிக்கிறேன். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்துவது சரியில்லை எனவும் பேசி இருந்தார்.
கடந்த விருது விழாவில் அரசியல் பேசவில்லை எனக் கூறிய விஜய் இந்த நிகழ்வில் நேராக ஒன்றிய அரசு எனக் கூறி பேசியது ஒரு பக்கம் பிரச்னையை கிளப்பி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வருட நீட் தேர்வில் மொத்தமாக 200க்கு, 160 கேள்விகள் தமிழ்நாடு மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து தான் இடம்பெற்றிருந்தது என கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனால் விஜய் முதல் அரசியல் பேச்சே பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.