india
தொடரும் வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி…பலி எண்ணிக்கை 340ஐ தாண்டியது!
கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் இடையில் தொடர்ச்சியாக மீட்பு பணி ஐந்தாவது நாளை எட்டி இருக்கிறது. இதில் பலி எண்ணிக்கை 340 கடந்திருப்பது இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளாவின் வயநாட்டு பகுதியில் அமைந்து இருக்கும் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் ஜூலை 30 நள்ளிரவு 2 மற்றும் 4 மணி அளவில் கடுமையான வெள்ளப் பெருக்குடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அனைத்து ஊரும் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்தது.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கும் நிலையில், பேரிடர் மீட்பு குழு உடன் இந்திய ராணுவமும் இணைந்து தொடர்ச்சியாக மண்ணில் புதையுண்டவர்களை மீட்க போராடி வருகின்றனர். இதில் இதுவரை 340 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஏனெனில் இதுவரை 300 பேருக்கு மேல் காணாமல் போய் இருப்பதாகவும், அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட இதுவரை தெரியாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் 300 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.