Connect with us

health tips

இந்த அறிகுறிகள் இருந்தா நீரிழிவு நோய் இருக்குனு அர்த்தமா!.. அப்போ உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..

Published

on

sugar test

நீரிழிவு நோய் என்பது இக்காலத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்க கூடியதாக இருக்கிறது. இந்த காலத்து உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை, மன நிலைமை இவை அனைத்தும் இந்த நோய் வருவதற்கு காரணிகளாக அமைகின்றன. இந்த நோயினை முற்றிலும் அளிக்க முடியாது எனினும் நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களின் மூலம் இந்த நோயினை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயானது நமது நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் நமது உடலில் ஆங்காங்கே சில பகுதிகளில் வலிகளை உண்டாக்குகிறது. இந்த அறிகுறிகளின் மூலம் நமக்கு நீரிழிவு நோய் உள்ளதை கண்டறியலாம்.

மேலும் இந்த வலிகளை தானாய் சரியாகும் என விடுவதினால் இந்த நிலை பின்னாளில் மோசமாகலாம். எனவே ஆரம்பத்திலேயே சரி செய்வதின் மூலம் நாம் நமது நலத்தை பேணி பாதுகாக்கலாம்.

தொடை பகுதிகளில் வலி:

thigh pain

thigh pain

நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடுவதால் நமது தொடைப்பகுதியில் தாங்கமுடியாத வலியினை உணர்கிறோம். இந்த வலியானது சாதாரணமாக எங்கேயாவது மோதுவதினால் ஏற்படும் வலியை விட சற்று அதிகமாக இருக்கும். இது நமக்கு அசெளகரியத்தை கொடுக்கும்.

அடி முதுகில் வலி:

severe lower back pain

severe lower back pain

இடுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிகப்படியான வலியினை உணர்ந்தால் அதனை நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக கருதலாம். இந்த வலியானது பெரும்பாலும் நமது தசைகள் தளர்வடைவதால் ஏற்படுகிறது.

முன் பாதத்தில் வலி:

foot drop

நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடுவதால் சிலர் அவர்களின் முன்னங்கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவதிப்படலாம்.

கால்களில் அதிகப்படியான வலி மற்றும் பிடிப்பு:

leg pain

leg pain

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடும் பொழுது கால்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கபடுகின்றன. இதனால் கால்களில் மிக அதிகப்படியான வலியினை உணர்கின்றோம். சிலருக்கு கால்களின் சுளுக்கு போன்ற வலிகளையும் உணர முடியும்.

பாதங்களின் அடிப்பகுதிகளில் கூச்சத்தினை உணர்தல்:

tingling sensation

tingling sensation

சர்க்கரையின் அளவு மாறுபடுவதால் சிலருக்கு கால்களின் அடிப்பகிதியில் கூச்சத்தினை உணரலாம். இதனை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் உடனே நமது இரத்த சர்க்கரையின் அளவை சோதிப்பது நல்லது.

இவ்வகை அறிகுறிகள் இருந்தால் அதனை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரிடம் செல்வது அனைவருக்கும் நல்லது.

google news