Connect with us

health tips

என்றும் இளமை பொங்கச் செய்யும்… மாரடைப்பையேத் தடுக்கும் பழம்… இதுதாங்க…!

Published

on

இன்றைய நவநாகரிக உலகில் மக்கள் அனைவரும் தங்களுக்கு வயசே ஆகக்கூடாது. எப்போதும் இளமைப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர்.

அதற்காக தலைமுடிக்கு டை அடிக்கின்றனர். வேறு எதைச் சாப்பிட்டால் இளமை பொங்கும் என்று பலருக்கும் சரிவரத் தெரிவதில்லை. அதற்கான பதிவுகளை இப்போது பார்ப்போம்.

எலும்பு உறுதி

நாவல் பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் எலும்பு உறுதியாக இருக்கும்.

வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துகள் நிறைந்துள்ளதால் உடலுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கிறது.

நாவல் பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கம் விழாமல் எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா வாய் முதல் குடல் வரை நமக்கு என்னென்ன புண்கள் வந்தாலும் நாவல்பழம் சாப்பிட்டு வந்தால் அவை ஈசியா குணமாகி விடும்.

பசியைத் தூண்டும். கல்லீரல், மண்ணீரலில் உண்டாகும் நோயைத் தடுக்கும்.

ஆன்டி ஆக்சிடண்ட் அதிகளவில் உள்ளது. ரத்த விருத்திக்கு ஏற்றது. வெண்புள்ளி, அரிப்பு நோய்களுக்கு அருமருந்து.

Heart Attack

மலச்சிக்கலைப் போக்கும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் நாவல் பழத்தில் கொஞ்சம் பிளாக் சால்ட், சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டால் போதும். உடனே குணமாகி விடும்.

பெண்களின் மலட்டுத்தன்மை குணமாக நாவல் மர இலையின் சாற்றை கஷாயமாக்கி அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

நாவல் பழத்தை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு உண்டாவதையேத் தடுத்து விடுமாம்.

google news