latest news
ஒழுங்கற்ற மாதவிடாயால் கஷ்டபடுறீங்களா?..அப்போ இத ஃபாலோ பண்ணுங்க..
ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது தற்போது பல பெண்களின் பிரச்சினையாக உள்ளது. இந்த காலத்து உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் போன்றவைகளாலும் பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சந்திக்கின்றனர். மாதவிடாயானது வரவேண்டிய தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கும் மேல் தள்ளி போவதை நாம் ஒழுங்கற்ற மாதவிடாய் என கூறுகின்றோம். இந்த காலகட்டத்தில் நமது உணவில் ஏற்படும் ஊட்டசத்து குறைபாடினால் கூட நமக்கு ஒழுங்கற்ற மாதவிடாயை சந்திக்கலாம்.
மேலும் பெண்கள் பொதுவாக உடல் எடை அதிகரிப்பதாலும், உடல் எடையை குறைப்பதாலும், PCOD, PCOS போன்ற காரணங்களாலும் இப்பிரச்சினையை சந்திக்கின்றனர். சில உணவு பழக்க வழக்கங்கள் நமக்கு இப்பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கலாம்.
மஞ்சள்:
மஞ்சள் நமது இந்திய உணவில் பரவலாக சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். இதில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் இருப்பதால் இது மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் மஞ்சள் நமது கருப்பை பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகபடுத்துகிறது.
பட்டை:
சமையலில் வாசனை பொருளாக பயன்படுத்தப்படும் பட்டை ஒரு சிறந்த ஆண்டிஆகிஸிடண்டாக செயல்படுகிறது. மேலும் இது நமது இடுப்பு பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் நமது மாதவிடாய் சமயத்தில் வரும் வயிற்று வலி போன்றவைகளுக்கு தீர்வாக அமைகிறது. பாலுடன் இதனை கலந்து குடிப்பதனால் மாதவிடாயை சீராக்கலாம்.
பப்பாளி பழம்:
பப்பாளியில் மிக அதிக அளவு கரோட்டீன் இருப்பதால் இது மாதவிடாய் சுழற்சியை சரிசெய்கிறது. மேலும் பப்பாளி நமது உடலில் உள்ள ஈஸ்டிரோஜனை சமநிலையில் வைக்க உதவுகிறது.
பச்சை காய்கறிகள்:
மாதவிடாய் காலத்திலோ அல்லது பிள்ளை பேறு காலத்திலோ பெண்கள் மிக அதிக அளவில் இரத்த இழப்பை சந்திக்க நேரிடலாம். இவ்வாறு உடலில் இரும்புசத்து குறைவதால் நமது உடலில் இரத்த செல்கள் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இயலாமல் போய்விடுகிறது. நாம் நமது அன்றாட உணவில் கீரை, பச்சை காய்கறிகளை சேர்ப்பதின் மூலம் நமது உடலில் இரத்ததின் அளவை சமநிலையில் வைக்கலாம்.
எனவே கடைகளில் பொறித்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து இயற்கையான உணவுகளை சாப்பிடுவதின் மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கலாம்.மேலும் அதிகாலையில் நடப்பது, தொடர்ச்சியான உடற்பயிற்சி போன்றவைகளாலும் நாம் நமது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யலாம்.