தற்கொலை செய்து கொண்ட ஷாரூக்கான் பட நடிகையின் தந்தை…அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம்…

நடிகர் ஷாரூக்கான் படத்தில் நடித்த வரும் மாடலிங்கில் புகழ்பெற்று விளங்கி வருபவருமான நடிகை மலைகாஅரோரா. பாலிவுட்டைச் சார்ந்த நடிகையான இவர் நாடு முழுவதும் மிகவும் பிரபலமானவர்.

இவரது தந்தை தனது வீட்டின் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பாலிவுட் வட்டாரத்தையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாடலிங் கலைஞராகவும், நடிகராகவும் நாடு முழுவதும் அறியப்பட்டவர் மலைகா அரோரா.

நடிகர் சல்மான்கானின் “தபாங்” பட சீரயல்களில் நடித்திருக்கிறார். ஷாரூக்கான் நடித்து வசூல் சாதனை படைத்த “தில் சே ரே” படத்தின் ஹிட் பாடலான ‘சைய்ய சைய்ய சைய்யா’ பாடலுக்கு நடனமாடியவர்.

இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு இவர் மிகவும் பிரபலமடைந்தார். மலைகா அரோரா தனது குடும்பத்தினருடன் மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை அனில் அரோரா கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது தந்தை அனில் அரோரா தனது வீட்டின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

Malaika Arora
Malaika Arora

ஓய்வு பெற்ற கடற்படை வீரரான அனில் அரோராவின் தற்கொலை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் பதினொன்றாம் தேதி இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

மும்மையின் பிரபல நடிகையான மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திரைத் துறையினரையும், சினிமா ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment