மெதுவா போக சொன்னது ஒரு குத்தமா..? முதியவருக்கு சாலையிலேயே நேர்ந்த கொடூரம்.. வைரல் வீடியோ..!

மெதுவாக போக சொன்ன புதியவரை பைக்கு ஓட்டுனர் காலையிலேயே அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சாலையில் வேகமாக சென்ற நபரை முதியவர் ஒருவர் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தி இருக்கின்றார். அதற்கு அந்த நபர் முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தான் அரங்கேறி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அல்வால் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிய வேகமாக பரவி வருகின்றது. அன்றைய தினத்தில் அல்வால் என்ற பகுதியில் 65 வயதான ஆஞ்சநேயலு என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக பைக் ஒன்று வேகமாக சென்றுள்ளது. பைக்கில் சென்றவரை மெதுவாக செல்லும்படி முதியவர் கூறி இருக்கின்றார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சரமாரியாக முதியவரை தாக்கி இருக்கிறார்கள். அந்த பைக்கில் வந்த நபருடன் அவரின் மனைவியும் மகளும் உடன் இருந்தார்கள். கீழே தள்ளி அந்த நபர் அடித்தபோது அவரின் மனைவி அடிக்க வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்த முயன்றிருக்கின்றார். இருப்பினும் முதியவரை தாக்குவதை நிறுத்தாத அந்த நபர் சரமாரியாக அடித்தார்.

சுற்றி இருந்தவர்கள் அவரை தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தார்கள். இறுதியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அந்த முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தாக்குதல் நடத்திய நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Comment