சரி டிட்வா போயிட்டு வாங்க.. சென்னையை விட்டு நகரும் தாழ்வு மண்டலம்..

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை விட்டு விலகிச் செல்வதால், தலைநகர் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது இதன் முக்கியக் காரணமாகும்.

நகரும் வேகம் அதிகரிப்பு :
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திலேயே மையம் கொண்டிருந்தது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான அச்சுறுத்தல் நீடித்தது.

ஆனால், தற்போது இந்தத் தாழ்வு மண்டலம் சென்னையை விட்டு விலகி, 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து சென்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு சுமார் 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் தற்போது கணிசமாக உயர்ந்து, மணிக்கு 8 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரும் வேகம் அதிகரித்ததே, தாழ்வு மண்டலம் சென்னையை விட்டு விரைந்து விலகிச் செல்ல முக்கியக் காரணமாகும்.

தாழ்வு மண்டலம் விலகிச் சென்றாலும், அதன் காரணமாகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Leave a Comment