வா ஒண்ணாவே போலாம்… கைகோர்த்துப்படி சற்றும் எதிர்பாராமல் ரயில் முன் பாய்ந்த தந்தை-மகன்… பதறவைத்த காட்சி…!

தந்தையும் மகனும் கைகோர்த்தப்படியே சென்று ரயிலின் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மும்பையில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாயந்தர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதாவது திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பார்ம் ஒன்றில் தந்தையும் மகனும் கைகோர்த்து படி நடந்து சென்றனர். அப்போது அந்த பிளாட்பார்மில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் டிரக்கில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அந்த வழியாக உள்ளூர் ரயில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் திடீரென்று அந்த ரயில் முன் கைகோர்த்த படி கீழே அமர்ந்து விட்டனர். ரயில் மிகவும் அருகில் இருந்ததால் ரயிலை நிறுத்த முடியாமல் ரயில் அவர்கள் மீது ஏறியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில் உயிரிழந்தவர்கள் நலசோபாரா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் மேத்தா என்பவரும் அவரது மகன் ஜே மேத்தா என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் பிளாட்பார்மில் நடந்து சென்று டிரக்கில் இறங்கி கைகோர்த்தபடி ரயில் முன் அமர்வதும் பின்னர் அவர்கள் மீது ரயில் ஏறுவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கின்றது. இந்த காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Comment