சினிமாவை விட்டு விஜய் போனால் என்ன?.. கருணாஸ் கொடுத்த ‘பளீச்’ பதில்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்காகத் தனது வெள்ளித்திரை பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கருணாஸ் இது குறித்து மிகவும் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சினிமா ஒரு கடல்!
விஜய்யின் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாஸ், “சினிமா ஒன்றும் அழிந்து விடாது. என்னை போன்ற சாதாரணமான பலரை வளர்த்து விட்டது இந்த சினிமா தான். அது எப்போதும் போல அப்படியேதான் இருக்கும்” என்று கூறினார்.

யார் போனாலும் சினிமா நிக்காது!
சினிமா உலகம் என்பது தனிநபர்களைச் சார்ந்தது அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “சினிமா யாருக்காகவும் காத்திருக்காது. ஒருத்தர் போனால் இன்னொருவர் வருவார். கலைத்துறை அதன் போக்கில் பயணித்துக் கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார் மேலும், விஜய் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் விலகினாலும், தமிழ் சினிமா தனது அடுத்தகட்ட நாயகர்களை உருவாக்கிக்கொள்ளும் என்ற ரீதியில் அவரது பேச்சு அமைந்திருந்தது.

சினிமா குறித்து எதார்த்தமாகப் பேசினாலும், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து கருணாஸ் அவ்வப்போது விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். “சினிமாவில் சண்டை போடுவது மட்டும் போதாது, மக்கள் பிரச்சனையில் களத்தில் நிற்க வேண்டும்” என அண்மையில் அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசிப் படமாகக் கருதப்படுகிறது. இந்த சூழலில், “சினிமா அவரை மிஸ் செய்யும்” என ஒரு தரப்பினர் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், கருணாஸின் இந்த ‘ப்ராக்டிகல்’ பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment