வாரம் ரூ.20,000… அன்பு மனைவியின் சிகிச்சை… கடைசியில் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு…!

கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரிஜு விஜயன். இவரின் மனைவி பிரியா நாயர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா நாயருக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். மேல் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள்.

வாரம் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை சிகிச்சைக்காக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் பலரிடமும் கடன் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலரும் அவரிடம் கடனை திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Comment