சென்னை வந்தடைந்தார் மாயாவதி… ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க பெரம்பூர் நோக்கி பயணம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க தனி விமானம் மூலமாக சென்னை வந்தடைந்த மாயாவதி, பெரம்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரின் இறப்புக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறார்கள். அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என தொடர்ந்து இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திர பிரதேச மாநிலம் முன்னாள் முதலமைச்சரான மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருவதாக நேற்று தெரிவித்தார். அதன்படி இன்று காலை உத்தரப் பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமான மூலமாக சென்னை வந்தடைந்தார் மாயாவதி.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பெரம்பூர் நோக்கி பயணம் செய்து வருகின்றார். தற்போது பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க இருக்கின்றார். மாயாவதி வருகையால் பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment