என் பையன் தான் வேணும் விஜய் காசு வேண்டாம்.. கரூரில் பறிகொடுத்த தாயின் கண்ணீர் கதறல்..

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத நெரிசலில் சிக்கி பல உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தால் மகனை இழந்து தவிக்கும் தாயின் கண்ணீர்க் கதறல், அரசியல் மேடையில் எழுந்த உற்சாகக் குரல்களைத் தாண்டி மக்களின்
மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் அவர்கள் கரூர் பகுதிக்கு வருகை தந்திருந்தார். அவரை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியதால், கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது. கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, நெரிசல் ஏற்பட்டது.

mother of son
mother of son

இந்த நெரிசலில் சிக்கிய அந்த இளைஞர் மூச்சுத்திணறி கீழே விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் தனது அன்பு மகனை இழந்த தாயின் துயரம், வார்த்தைகளால் விவரிக்க முடியாததாக இருந்தது. தங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த மகனை அரசியல் கூட்டத்திற்கு அனுப்பியதன் வலியை அவர் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

மேலும் அவர் கூறியதாவது, “எனக்கு விஜய் கட்சியிலிருந்து பல உதவிகள் வந்தது. மேலும் எங்கள் குடும்பத்திற்கு அவர்கள் இன்ஷூரன்ஸ் வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் விஜய் சந்திக்க சென்ற போது அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டார். என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கேட்டார்”.

”என் மகன் இறந்ததற்க்கு இழப்பீடுடாக 20 லட்ச ரூபாய் பணமும் என்னுடைய வங்கி கணக்கில் வந்தது. அதை வைத்து நாங்கள் எங்கள் அன்றாட தேவைகளை சந்தித்து வருகிறோம். இருப்பினும் என்னுடைய மகன் இழந்த சோகம் இன்னும் போகவில்லை. தினமும் எனக்கு 100 முறை போன் பேசுவான். ஆனால் இன்று அந்த போன் சத்தமே இல்லாமல் இருக்கிறது”.

”என் கணவரும் இல்லை இப்போது எனக்கு மகனும் இல்லை. நான் விஜய் கிட்ட வாங்கின பணத்தை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுகிறேன். என் மகனை எனக்குத் தாருங்கள். நான் சந்தோசமாகவே இல்லை. என் பையன் திரும்ப வந்தாலே போதும்” என்று கண்ணீருடன் கதறி அழுதார்.

Leave a Comment