சென்னையில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நாளை (வியாழக்கிழமை) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
மின்தடை நேரம்:
காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை. (பராமரிப்பு பணிகள் விரைந்து முடிந்தால் முன்னதாகவே மின் விநியோகம் சீரமைக்கப்படும்).
📍 மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்:
மாங்காடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை இருக்கும்:
முக்கிய வீதிகள்: எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோவில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பஜார் வீதி, பாலந்தீஸ்வரர் கோவில் தெரு.
கோவில் மற்றும் தோப்பு பகுதிகள், பட்டூர், பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு. பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், அடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர். காமாட்சி அம்மன் நகர், கொழுமணிவாக்கம் சார்லஸ் நகர், ஸ்ரீராம் நகர், கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, தென் காலனி மற்றும் நியூ காமாட்சி நகர்.
குறிப்பு: இப்பகுதி பொதுமக்கள் மின் தடையால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.