நேத்து முளைச்ச காளான்லாம் CM ஆக முடியாது.. விஜய்யை தாக்கி பிரேமலதா விஜயகாந்த் மறைமுக பாய்ச்சல்..

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்கிற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தனது மக்களை சந்தித்து உரையாற்றினார். அதில்,” ஒரு பெண்ணின் கஷ்டத்தை ஒரு பெண்ணால் மட்டுமே உணர முடியும் என்றும் இன்று தனியாக ஒரு பெண் ரோட்டில் சென்றால் அவளிடமிருந்து தங்கத்தை பறிப்பது, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது என்று தமிழகத்தில் பரவலாக நடந்து வருகிறது”.

”இதை மாற்ற வேண்டுமானால் வருகிற தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். அனைவரும் சென்னையில் உள்ள விஜய்காந்த் ஆலயத்திற்கு வரவேண்டும் மேலும் அவர்களை சிறந்த முறையில் உபசரித்தும் அனுப்புவேன். மக்கள் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களின் வாக்குகளை தவறாமல் கட்டாயம் செலுத்த வேண்டும்”.

”வாக்குகளை யாரும் திருடிவிடக்கூடாது. எல்லோரும் தங்களின் ஜனநாயக பங்கை அளித்தால் கண்டிப்பாக வாக்குத்திருட்டை தடுக்கலாம். மேலும் மக்களுக்கு நல்லது செய்கின்ற எண்ணம் உடைய கட்சி மட்டுமே நமக்குத் தேவை. அந்தக் கூட்டணி தான் நிச்சயமாக 2026 தேர்தலில் வெற்றிவாகை சூடி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் போற போக்கில் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார். அதில்,” யாரும் இங்கே எடுத்த உடனே வந்து விட முடியாது. நேற்று முளைத்த காளான் எல்லாம் இங்கே எடுப்படாது. ஒரு நாள் மழைக்கே தாங்காது. தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம். உங்கள் எல்லோரையும் பார்க்க சின்ன கேப்டன் தொகுதி வாரியாக விரைவில் வருவார்”.

”2011 இல் கேப்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 2026 இல் என்ன நடக்கும்னு வேடிக்கை பாருங்கள்”. என்று குறிப்பிட்டுள்ளார். தேமுதிக தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேமலதா விஜயை விமர்சித்திருப்பது இந்தக் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பது போல் இருக்கிறது.

Leave a Comment