சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்து குறித்து அறிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி :
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு சிறிய ஆறுதலை அளிப்பதாக உள்ளது.