மேட்டர் இன்னும் முடியல.. அடுத்த வாரம்தான் இருக்கு!.. விஜய் விசாரணை பற்றி நிர்மல் குமார் ஓப்பன் டாக்..

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் சிபிஐ கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று தனது முதல் கட்ட விசாரணையை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில், சிபிஐ அலுவலகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

கேட்ட கேள்விக்குலாம் பதில் சொல்லியாச்சு!
நேற்று சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் கேட்ட 35-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விஜய் விரிவான விளக்கங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்துப் பேசிய நிர்மல் குமார், “விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தேவையான விளக்கங்களை அவர் தெளிவாக அளித்துவிட்டார். ஆனால், இதோடு விசாரணை முடிந்துவிடவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

விசாரணை தேதி மாற்றம் ஏன்?
அடுத்த கட்ட விசாரணை குறித்துப் பேசிய அவர், “அடுத்த வாரத்தில் சிபிஐ மீண்டும் விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளது. ஒருவேளை தேதி உறுதியானால் விஜய் மீண்டும் ஆஜராவார். ஆனால், தற்போது விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் மற்றும் சென்சார் தொடர்பான வேலைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. எனவே, அந்த வேலைகளைக் கவனிப்பதற்காக சிபிஐ-யிடம் பேசி விசாரணை தேதியை சற்றுத் தள்ளிவைக்கக் கேட்டுள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

“ஜனநாயகன்” பட சிக்கல்:
விஜய் ஒருபுறம் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் அவரது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு கெடுபிடி காட்டி வருவதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளதால், தவெக தரப்பு சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி வருகிறது.

சிபிஐ விசாரணை மற்றும் பட ரிலீஸ் என இரண்டு முனைகளில் விஜய்க்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகத் தொண்டர்கள் கருதும் நிலையில், நிர்மல் குமாரின் இந்த விளக்கம் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment